கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

 

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது நிறுத்தப்படலாம் என இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

“கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல வருடங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட உதவியில் எதுவும் நடக்காத சூழ்நிலையில், கல்வித் துறைக்காக வழங்கும் உதவியை இப்போது நிறுத்தும் நிலைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வந்துள்ளது.”

ஆசிய அபிவிருத்தி வங்கி 41 திட்டங்களுக்காக இலங்கைக்கு வழங்கிய உதவி 1339.17 மில்லியன் டொலர்கள் என, கடந்த வார இறுதியில் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

“ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை 41 திட்டங்களுக்கு இலங்கைக்கு 1339.17 மில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த திட்டங்களில் முக்கிய விடயங்கள் கல்வித் துறையில் செய்யக்கூடிய விடயங்கள், இன்றைய கல்வியின் மாற்றத்திற்கு மிகவும் அவசியமான பல விடயங்கள் இருந்தன என்பதை நாங்கள் அறிவோம். ஒன்று பாடத்திட்டத்தை மாற்றுவது. பாடத்திட்டத்தை மாற்றுவது கல்விக்கு ஒரு முக்கிய காரணியாகும். இந்த பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு உதவி வழங்கப்பட்டது.”

கல்வி முறையில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக மொடியுலர் முறையை செயல்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட உதவி எவ்வாறு பெறப்பட்டது என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

“மேலும், உபாலி சேதர கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளராக இருந்த காலத்தில் கல்வி முறையில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக மொடியுலர் முறையை செயல்படுத்தும் செயல்முறை கொண்டுவரப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். அதற்கான நிதி பெறப்பட்டது. மேலும், இலங்கையில் தற்போதைய பரீட்சை மதிப்பீட்டு முறைமையை மாற்றுவதற்காக இந்த உதவி குறிப்பாக வழங்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.”

இலங்கையில் தேக்கமடைந்த கல்வி முறையை மாற்றுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு உதவி பெற்ற போதிலும், அந்தப் பணத்தில் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், குற்றம் சாட்டுகிறார்.

இப்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட இந்த உதவித் தொகையைக் கொண்டு கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுக்காமையால், இந்த உதவி நிறுத்தப்படும் நிலைமை ஏற்படுகிறது, இந்த உதவியைக் கொண்டுதான் நாட்டின் கல்விச் செயல்முறை முன்னேறி வருகிறது. ஆசிய அப்விருத்தி வங்கியால் வழங்கப்படும் கடன்கள்தான் இது. இப்போது, இவற்றை மக்களின் வரிப் பணத்தில் செலுத்த வேண்டும்.”

இத்தகைய சூழ்நிலையில் உண்மையான பிரச்சினை என்னவென்றால், மாணவர்கள் கல்வியின் நன்மைகளை இழக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்கத் தலைவர், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பியுள்ளார்.

“இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இந்தப் பணத்தில் தேவையான பணிகள் செய்யப்படவில்லை என்பது மாத்திரமல்ல, உண்மையான பிரச்சினை என்னவென்றால், மாணவர்கள் இந்தக் கல்வியின் நன்மைகளை இழக்கிறார்கள். எனவே, இது தொடர்பாக அரசாங்கம் என்ன சொல்கிறது என நாங்கள் கேட்கிறோம்.”

இந்த நிலைமைக்கு தேசிய கல்வி நிறுவனம் பொறுப்பு எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் குற்றம் சாட்டியது.

“இப்போது, இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய முக்கிய நிறுவனம் தேசிய கல்வி நிறுவனம் என்பதை நாங்கள் அறிவோம். இன்றுவரை, தேசிய கல்வி நிறுவனம் மாத்திரம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 99 மில்லியன் உதவியைப் பெற்றுள்ளது. என்ன செய்யப்பட்டுள்ளது? எதுவும் இல்லை.”

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post