பதுளை வெலிமடை - மாதோவிட்ட பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் நான்கு பேர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரத்திலிருந்த குளவிக் கூட்டை பருந்து ஒன்று தாக்கியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாதோவிட்ட பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய திருமணமாகாத வயோதிப பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் அடிக்கடி குளவிக் கொட்டு தாக்குதலால் மக்கள் அவதிப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.