கட்டார் - ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு பதிலடியாக, கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் "சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான ஏவுகணைத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"சர்வவல்லமையுள்ள கடவுளையும், ஈரானின் விசுவாசமுள்ள, பெருமைமிக்க மக்களையும் நம்பி, ஈரான் இஸ்லாமிய குடியரசு, அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் ஒருபோதும் பதிலளிக்காமல் விடாது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை அதன் வான் பாதுகாப்புப் படைகள் "வெற்றிகரமாக" முறியடித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கட்டாருக்கு வேலை நிமித்தம் சென்ற இலங்கை தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.