வெளிநாட்டில் வந்த ஒரு பிள்ளையின் தாயை காணவில்லை
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரகந்தை தோட்டம் பெசிபன் பிரிவை சேர்ந்த அய்யாசாமி மங்கலேஸ்வரி என்ற ஒரு பிள்ளைகளின் தாயை காணவில்லை என பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த 26/04/2025 அன்று மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார் என கணவர் தெரிவித்துள்ளார்.
இவர் வீடு வந்து சேரவில்லை உடனடியாக லிந்துலை பொலிஸ் நிலையத்திக்கு நேரில் சென்று தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்து வருமாறு கூறிய உடன் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்து மீண்டும் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் 14/06/2025 முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று வரை தனது மனைவி வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
தாயை இழந்து தவிக்கும் குழந்தை மற்றும் லிந்துலை மவுசல்ல கீழ் பிரிவை சேர்ந்த கணவர் சவுந்தரராஜன் சந்திர குமார் தனது மனைவியை தேடி வருகின்றார்.
கீழ் காணும் புகைப்படத்தில் உள்ள பெண்ணை கண்டால் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும்(0522258340)
கணவர் சந்திர குமார் 0743741541 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனைத்து சமூக ஊடக நண்பர்களுக்கும் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த பகிர்வை பகிர்வதன் மூலம் ஒரு சின்ன குழந்தையின் தாயை கண்டுபிடிக்க உதவி செய்வோம்.