இன்று எரிபொருள் விலைகளில் இலங்கையில் மாற்றம் ஏற்படுமா-சற்று முன் வெளியான தகவல்..?

 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.


இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்


கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை தளம்பல் நிலையில் காணப்பட்டது.


இந்த நிலையில், குறித்த விடயம் இலங்கையின் மாதாந்த எரிபொருள்  திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.