முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சும்மான முமுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மாங்குளம் காவல்துறை சிறப்புப் படை அதிகாரிகள், திருமுருக்கண்டி பகுதியில் உள்ள ஒரு இனிப்புக் கடையில், இனிப்புக் கடை நடத்துவதாகக் கூறி, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பின்வரும் நபரையும் கைது செய்த்துடன் கேரள கஞ்சாவையும் மீட்டு மேலதிக விசாரணைக்காக மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.