பலநூற்றுக்கணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு நேற்று முன்தினம் (01) 3 மாணவிகள் சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கியவேளை இருவரும் கேணிக்குள் தவறி வீழ்ந்துள்ளனர். அதனையடுத்து மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்ட நிலையில் குமுழமுனை இளைஞர்களால் விழுந்த மாணவிகள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சற்சொரூபநாதன் றஸ்மிளா எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் இன்று (03) பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்று கற்பூரபுல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.