வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இன்று (29)அதிகாலை இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில் கடற் பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்த வேளை அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு குறித்த மீனவருக்கு மேல் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த மீனவர் பருத்தித்துறைல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிவார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.