திடீரென அலறிய கணவன்-யூரியுப் வீடியோ பார்த்து மனைவி செய்த கொடூரம்..?

 

யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி ஒருவர் கணவரைக் கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள பன்மனிவாடி என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு மணிஷ் ரத்தோட் என்பவர் தனது மனைவி சரோஜ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிஷ் ரத்தோட் இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது அவரது மனைவி சரோஜ் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றியுள்ளார்.

 

அதன் பின்னர் அவரை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார். கொதிக்கும் எண்ணெய் கொட்டப்பட்டதால் அலறித் துடித்த மணிஷ் கத்தி கதறினார். இருப்பினும் அவரது மனைவி கதவை திறக்கவில்லை.

 

மேலும் வீட்டிற்குள்ளே இருந்த அவர்களது குழந்தைகளும் கத்தி கதற தொடங்கினர். அதன் பின்னர் மனைவி சரோஜ் கதவை திறந்தார்.

 

இதையடுத்து தனது சகோதரியின் உதவியுடன் மணிஷ் ரத்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் சரோஜுக்கும் இன்னொருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.

 

இதனை அவரது கணவர் மணிஷ் ரத்தோர் கண்டுபிடித்தபோது இருவருக்குள்ளே வாக்குவாதம் அதிகரித்து இருக்கிறது.

 

ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர். அந்த சூழலில் யூடியூபில் மனைவி சரோஜ் வீடியோ ஒன்றை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை பார்த்த பின்னர் கணவர் மீது எண்ணெய் ஊற்றிக் கொலை முயன்றதாக தெரிகிறது.

 

இருப்பினும் கணவர் மனிஷ் ரத்தோட் தனது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருந்த காரணத்தால் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கைது செய்யப்பட்ட சரோஜ் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி கணவரை கொல்ல முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post