பொலநறுவையில் ஏரி ஒன்றில் உயிரை போராடிய நபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, அவர்களின் மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திம்புலாகலவில் உள்ள எல்லே ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நேற்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் இருந்து பொலநறுவையிலுள்ள அவர்களின் உறவினர்கள் வீட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரத்மலானை பகுதியை சேர்ந்த 30 வயதான மேனகா தர்ஷினி, 27 வயதான தாரகா டி சில்வா, 25 வயதான திலோகம திலகரட்ன, 13 வயதான லிஹினி பத்திரிகா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
திலோகம திலகரத்ன என்பவர் ஏரியில் நீந்தச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற மூன்று பெண்களும் ஏரியில் குதித்ததாகவும், இதனாலேயே அவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.