குருணாகலில் போதிராஜா மாவத்தை பகுதியில் பஸ் சில்லுக்குள் சிக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் (02) மாலை இடம்பெற்றுள்ளது.
குருணாகலில் இருந்து மெல்சிறிபுர நோக்கிப் பயணித்த பஸ்ஸில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து பஸ் சில்லுக்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த வயோதிபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபர் ஆவார். மேலும் சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.