டெல்லியைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் உல்லாசப் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷுக்கு சென்று, அங்கு ஒரு பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
இந்த ஹோட்டல் சுமார் 50 அறைகளைக் கொண்ட பெரிய விடுதியாகும். ஆனால், அவர்களுக்கு அந்த பயணம் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக மாறியது. நள்ளிரவு 3:28 மணியளவில், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அறையின் ஜன்னல் வழியாக ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த சத்தத்தால் திடுக்கிட்டு எழுந்த நண்பர்கள், அறையைச் சுற்றி ஆள் யாரும் இல்லாத நிலையில், பால்கனியில் நீண்ட தலைமுடி தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பயங்கரமான தருணத்தை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர், இது இணையத்தில் வைரலாகி, பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘delhi_ke_teen_dost’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, “ரிஷிகேஷ் பேய் அரண்மனை” என்ற தலைப்பில் வெளியாகி, ஐந்து நாட்களில் 687,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
வீடியோவில், இரண்டு நண்பர்கள் பதற்றத்துடன் அழுகுரல் மற்றும் தலைமுடி குறித்து விவாதிப்பது பதிவாகியுள்ளது, ஆனால் மூன்றாவது நண்பர் இந்த குழப்பத்திலும் தூங்கிக் கொண்டிருந்தார். வீடியோ திடீரென முடிவடைந்து, பார்வையாளர்களை ஆச்சரியத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் உண்மையா, புனையப்பட்டதா என்று இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது, சிலர் இதை விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடி, நள்ளிரவு 3 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. அந்த சம்பவத்திற்கு பிறகு, ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் பெண்ணின் அழுகுரல் கேட்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த அழுகுரல் மற்றும் பால்கனியில் தலைமுடி தொங்குவது கேமராவில் பதிவாகியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த ஹோட்டல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள மர்மமான கதைகள், இந்த வீடியோவால் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இது ரிஷிகேஷில் உள்ள பல பயணிகளிடையே ஆர்வத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், இந்த சம்பவம் பயணிகளுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. மேலும், இது போன்ற மர்மமான அனுபவங்கள் பற்றிய விவாதங்கள், பயண இடங்களில் உள்ள புராணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளன.