தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் இந்த பதாதையை அமைத்தமைக்கான காரணத்தை பெண் ஒருவர் இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமை சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறேன்.
பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன்.
பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன்.
அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.
நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்தமதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன்.
வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.” என்றார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முள்ளியவளையில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்தனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு குறித்த பதாதைகள் இனம் தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.