மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் அவர் மீட்கப்பட்டார்.
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
குறித்த பெண் மீட்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.