கொழும்பிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை (20) சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணி விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார்.
விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து விமானியை எச்சரித்தனர்.
பின்னர் விமானி அவசர உதவிக்காக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டார்.
முயற்சிகள் இருந்தபோதிலும், பயணியை காப்பாற்ற முடியவில்லை. விமான நிலைய பொலிஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.