சினேகாவையும் சீ தமிழையும் விமர்சித்து உங்கள் முகநூலை லைக்குகளால் அலங்கரிக்க நினைத்த அனைவருக்கும் அதே மேடையில் பதிலடி கொடுத்த சினேகாவை இப்போ என்னவென்று விமர்சிக்க போகின்றீர்கள்.
அவரவர்களின் கஸ்டம் அவர் அவர்களுக்கு.முதலில் யாரையாவது விமர்சிக்கும் போது அவர்களை பற்றி முதலில் தேடுங்கள்.நான் போய் நேரடியாக பார்த்ததால் தான் கூறுகின்றேன்.அவர்கள் நிலை அத்தனை கஸ்டமான வாழ்க்கை.இன்று மேடையில் சினேகா கூறினார் இலங்கையில் நான் ஒரு நிகழ்ச்சியில் பாடும் போது எனக்கு நல்ல உடை தந்தார்கள்,மேக்கப் போட்டார்கள் என்னை ஒரு செல்வந்த பெண்ணாக காட்டினார்கள் என சினேகா தன் வாய் திறந்து கூறினார்.உண்மையும் அது தான்.ஆனால் அதையறியாமலும் சினேகாவின் குடும்ப சூழ்நிலையை அறியாமலும் ,அந்த ஊரில் அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை அறியாமல் ஒரு சிலர் சினேகாவை சீ தமிழ் அப்படி காட்டியது சினேகா அங்கே போய் எங்கள் மானத்தை வாங்குறாள் என்றெல்லாம் பல விமர்சனங்களை காணக்கூடியதாக இருந்தது.
இதில் ஹைலட் என்னவென்றால் இது சம்மந்தமாக அர்ச்சனா அக்காவிடம் பேசியதாக கூட யாரோ ஒருவர் பதிவிட்டதை படிக்க நேரிட்டது.ஒருவர் ஒரு இடத்துக்கு அதுவும் ஒரு கனவு மிக்க ஒரு மேடைக்கு செல்லும் போதோ அல்லது அவரது கனவு நனவாகும் போதோ முதலில் எதைபற்றியும் தேடாமல் விமர்சிப்பதை நிறுத்துங்கள்.தேடியறிந்து விமர்சனம் பண்ண பழகி கொள்ளுங்கள்.
அந்த சினேகா அவ்விடத்துக்கு செல்ல ஒரே ஒருவர் தான் காரணம் அவர் எங்கள் பூண்டுலோயா மண்ணுக்கு சொந்தகாரர் எங்கள் பூண்டுலோயாவின் பெருமை யமுனா அக்கா மாத்திரமே அந்த பிள்ளையை அந்த மேடையில் ஏற்றுவதற்கு அவர் எத்தனை கஸ்டப்பட்டிருப்பார்.இங்கு பிராந்திய ஊடகவியராளர்களையே வளரவிடாமல் தடுக்கும் ஒரு சில சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய ஒரு ஊடகத்தில் இங்குள்ள ஒரு பெண் தனியாக போராடி இந்த சினேகாவிற்கு வாய்ப்பு பெற்று கொடுத்துள்ளார் என்றால் அவரின் போராட்டம் அவரின் அர்ப்பணிப்பு எவ்வளவு இருக்கும்.
யமுனா அக்கா உங்களுக்கு எங்கள் பூண்டுலோயா மண் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.யார் எத்தனை விமர்சனம் பண்ணினாலும் சினேகா இன்று அவளது கனவு மேடைக்கு சென்று விட்டால் இனியாவது அவதூறாக விமர்சிப்பதை விட்டு அந்த பிள்ளையை முன்னோக்கி கொண்டு செல்ல கைக்கோர்ப்போம்.