பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்கன்குன்யா தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை, மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் 06 தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு திட்டம் திங்கட்கிழமை (09) அன்று தொடங்கப்பட்டது என்று பொகவந்தலாவை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரியா தெரிவித்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 தொழிலாளர்களும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஊழியர்களுக்கு தற்போது சிகிச்சை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய மாவட்ட மருத்துவ அதிகாரி, இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார இயக்குநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அலுவலக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு திட்டத்தைத் திங்கட்கிழமை தொடங்கினர் என்றும் மேலும் கூறினார்.