கத்தாரில் இருந்து சுற்றுலா சென்ற இந்திய குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்,25 பேர் வரையில் காயமடைந்தனர்:
கத்தாரில் வேலை நிமித்தமாக வசிக்கின்ற இந்தியர்கள் சிலர் பக்ரீத் விடுமுறையினை முன்னிட்டு சுற்றுலா செல்ல திட்டமிட்டு தனியார் சுற்றுலா ஏஜென்சி மூலம் கென்யாவுக்கு சென்றனர்.
இந்நிலையில் சுற்றுலா சென்ற 28 பேர் அடங்கிய இந்தியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கென்யாவில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் முதல்கட்ட தகவல்படி 5 பேர் உயிரிழந்தனர்,
26 பேர் வரையில் காயமடைந்தனர். பேருந்தில் 28 இந்தியர்கள், கென்யா நாட்டு ஓட்டுநர், ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேரும் இருந்தனர். இதையடு்த்து பேருந்தில் மொத்தமாக 31 பேர் பயணம் செய்தனர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கவலைக்கிடமாக நிலையில் படுகாயங்களுடன் 5 பெரும், மற்றவர்கள் லேசான காயங்களுடன் கென்யாவின் வெவ்வேறான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் குழுவில் கேரளா,கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு கென்யாவின் நியாண்டருவா பகுதியில் உள்ள நியாஹுருருவில் உள்ள பனாரி ரிசார்ட்டுக்குச் சென்ற பேருந்து, திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் பேருந்து இரண்டு துண்டானதாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் 3 பெண்கள், இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர். இறந்தவர்கள் 5 பேரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இவர்கள் விபரங்கள் மாவேலிக்கரையைச் சேர்ந்த கீதா ஷோஜி(58), ஜஸ்னா(29), ருஹி மெஹ்ரின் முகமது(18 மாதங்கள்), ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த ரியா (41), டைரா ரோட்ரிக்ஸ்(8). சம்பவம் குறித்து கெனியா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்த ரியா மற்றும் டைரா இருவருடைய உடல்களும் அவருடைய கணவருடைய(ஜோயல்) ஊரான கோயம்புத்தூர் கொண்டு செல்லப்படும் என்று தெரியவந்துள்ளது.
மேலும் கென்யாவில் உள்ள இந்தியாவை சேர்ந்த கேரளா, தமிழக சமூக சேவை அமைப்புகள், கென்யா இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைந்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் அனுப்புவதற்க்கு தேவையான நடவடிக்கையினை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறை இந்த துயரமான சம்பவம் தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றன.
விபத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு துரிதமாக தேவையான ஆவணங்களை தயார் செய்து வழங்க அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.