இந்தியாவின் - ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இன்று பாடசாலை காலை ஆரம்பிக்கப் பட்ட சிறிது நேரத்திலேயே மேற்கூரை முழுவதுமாக இடிந்து வீழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்தில் 17 மாணவர்கள் படு காயமடைந்துள்ளனர்.
மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.