தமிழகத்தில் உயிர் நண்பனின் சடலத்தை பார்த்து கதறி அழுத நண்பன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தின் திருச்சி கே.கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் செல்வம் (55). இவரும் ஜி நகரைச் சேர்ந்த பாஸ்கரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கொத்தனாரான செல்வத்திற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி கொத்தனார் செல்வம் வேலை செய்துகொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நெருங்கிய நண்பர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அர்ச்சியடைந்து ஓடி வந்த பாஸ்கரன், செல்வத்தின் உடலைப் பார்த்துக் கதறி அழுததுடன் திடீரென பாஸ்கரனும் அதே நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் பாஸ்கரனை மீட்டு அருகே உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வைத்தியசாலையில் பாஸ்கரனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நண்பனை விட்டு மரணத்திலும் பிரியாத பாஸ்கரனின் இழப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.