இந்த ராசியினருடன் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதாம்... யார் யார்ன்னு தெரியுமா

 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், நிதி நிலை, காதல் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாதுடன் இவர்களுடன் இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வார்கள்.

அப்படி வாழ்வில் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் உன்னதமான குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள்  இயல்பான நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் விரைவான புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் நிறைந்து காணப்படுவதால், இவர்கள் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்சியால் நிரம்பியிருக்கும்.

இந்த ராசியினரின் வார்த்தைகளில் சோகத்தை தீர்க்கும் மருந்து இருப்பது போன்ற உணர்வு மற்றவர்களுக்கு தோன்றும். இவர்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதால் இவர்களை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. 

அவர்கள் சரியான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள், மேலும் மிகவும் சலிப்பான விஷயத்தைக் கூட வேடிக்கையாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

இவர்கள் கடினமான சூழ்நிலைகளையும் தங்களின் நகைச்சுவை குணத்ததால் எளிமையாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

சிங்க ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை எப்படி கவர வேண்டுமென்று நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. 

மேலும் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருப்பதற்கு அவர்களின் நகைச்சுவை உணர்வை சரியான இடத்தில் சரியாக  பயன்படுத்துவார்கள்.

அவர்களின் நாடகத் திறமை மற்றும் கதை சொல்லும் ஆற்றல் இவர்களை சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும். 

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தைரியமானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்சிச்சிக்கு நிச்சயம் குறைவே இருக்காது. 

அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றி அவர்களுக்கு தெரியாது அவர்கள் மனதில் தோன்றுவதை எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

இது மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். இவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எனவே வாழ்வில் யாரையும் ஏமாற்றவே மாட்டார்கள்.இவர்களால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கும். 


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post