யாழில் வீடொன்றில் விசிய துர்நாற்றம்-தேடி சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

 யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நான்கு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். இதனை யாரும் அவதானிக்காத நிலையில் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் மானிப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் குறித்த முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்தனர்.

சடலத்தை மீட்ட மானிப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post