யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றையதினம் நடைபெறுகிறது.
அந்தவகையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.