இணையத்தில் வினோதமான சம்பவங்கள் வைரலாவது வழக்கம்தான்.
ஆனால், சமீபத்தில் ஒரு இளைஞர் ஜவுளி கடை பொம்மையை எடுத்து வந்து, அதற்கு முத்தமிட்டு, மோதிரம் மாற்றி, மனைவியைப் போல கட்டிப்பிடித்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வீடியோவில், இளைஞர் ஒருவர் "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" என்று கூறியபடி, ஜவுளி கடையில் இருந்த மேனிகன் பொம்மையை எடுத்து வந்து, அதனுடன் காதல் நாடகம் நடத்துகிறார்.
பொம்மைக்கு மோதிரம் அணிவித்து, முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ஆடும் அவரது செயல்கள், பார்ப்பவர்களை அதிர்ச்சியிலும், சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகளை பெற்று வருகிறது. சிலர் இதை வேடிக்கையாக ரசிக்க, மற்றவர்கள் இளைஞரின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கண்றாவி காட்சிகள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. இது உண்மையான சம்பவமா, அல்லது வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
இருப்பினும், இந்த வினோதமான செயல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, பேசுபொருளாக மாறியுள்ளது.