திங்கட்கிழமை, 14 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எல்லா வகையிலும் நன்மை, தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தேகதிடம், வீரம், தைரியம் எல்லாம் ஓங்கும். பிறருக்குக் கட்டளை இடும் படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
தெய்வீக காரியங்கள் ஈடேறும். எளிதில் வெற்றி கிடைக்கும். சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
கன்னி
virgo-kanni
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். எதிரிகள் பணிவர்.
மகரம்
capricorn-magaram
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க நண்பர்களுடன் சுமுகமாக இருத்தல் அவசியம். வண்டி, வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து விவேகமாக நடக்கவும்.
கடகம்
cancer-kadagam
பண இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத வகையில் செலவுகள், மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.
சிம்மம்
leo-simmam
இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வருமானம், மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவு வகைகள் ஆகியவையும் கிடைக்கும்.
துலாம்
libra-thulam
கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மீனம்
pisces-meenam
வாயை அடக்கி வம்புக்கு செல்லாதிருப்பது சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
தனுசு
sagittarius-thanusu
அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலம் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.
கும்பம்
aquarius-kumbam
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார். பெரியோர் பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்