சனிக்கிழமை, 26 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
எல்லாவற்றிலும், எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
மனதில் தைரியமும், புதிய தகவல்கள் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
gemini-mithunum
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். வார்த்தைகளைக் கட்டுப்படுத்தவும். வண்டி, வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன், வேகத்தை குறைத்து விவேகமாக நடந்தால் விபத்தை தவிர்க்கலாம்.
கன்னி
virgo-kanni
பலவகைகளில் பணவரவு வரும் நாள். பெண்களால் இலாபமும், போகமும் கிடைக்கப் பொங்கும் மகிழ்ச்சி. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி உயர்வு நிலை அடைவர். அதன் காரணமாக தங்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்
capricorn-magaram
காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். பயணங்கள் இனிமை தரும். கவனமாகப் படித்து கல்வியில் வெற்றிகளைக் குவிக்கும் நிலை ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
உங்கள் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார்கள், பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
நாவை அடக்க வேண்டிய நாள். வம்புக்கு செல்லாது இருப்பதே சுகம். பெண்களால் தேவையற்ற விரயச் செலவுகள் ஏற்படும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
துலாம்
libra-thulam
உடன்பிறப்புகளால் அதிக உதவி உண்டு. சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மீனம்
pisces-meenam
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். கட்டுக்கு அடங்காத செலவுகள் ஏற்படும். களவு போவதினால் மனச்சங்கடங்கள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அன்பாகப் பழகவும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வீக காரியங்கள் ஈடேறும். யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். பணவரவால் மனம் பரவசப்படும் நாள். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். உறவினர் உதவியால் உள்ளம் மகிழும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.