ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
உறவுகளாலும், உடனிருக்கும் பெண்களாலும் தொல்லைகள் ஏற்படும். வாழ்க்கையில் புதுத் திருப்பங்களால் கீழான நிலை ஏற்படலாம். உங்கள் திறமை பாராட்டப்படும். பயணத்தில் தடைகள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
நினைத்தபடி எதுவும் நடக்காது. வீட்டில் களவு போவதை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். ஒருவித பயம் கலந்த உணர்வு இருக்கும். பண இழப்புக்களால் தாக்கம் குறையும்.
மிதுனம்
gemini-mithunum
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் ஏற்படும். சாகசம் புரிவீர்கள். பிறர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து அசத்துவார்கள். காரிய அனுகூலம் உண்டு.
கன்னி
virgo-kanni
வேலைப்பளு காரணமாக வேளாவேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். ஆறுவது சினம் என்றபடி முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மகரம்
capricorn-magaram
கோபத்தை அடக்கி, வார்த்தைகள் அளவோடு பேசவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தெய்வப் பிரார்த்தனைகள் மூலம் தெளிவு பெற வேண்டிய நாள்.
கடகம்
cancer-kadagam
பண விஷயமான சிந்தனைகளே, இன்று உங்கள் மனதில் மேலிடும். கோபத்தை அடக்கி குணமா இருந்தால் நிம்மதி பிறக்கும். சகோதர வகையில் சமாதானமாகப் போனால் நல்லது.
சிம்மம்
leo-simmam
உங்களுக்கு மேலானவர்களை சந்திக்கும் எண்ணம் ஈடேறும். நல்லுணவு, மற்றும் நல்ல நண்பன் சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் சென்று இலாபத்தை அள்ளுவார்கள்.
துலாம்
libra-thulam
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகாரப் பதவி கிடைக்கும். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை அடைவீர்கள். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சினிமா போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் ஈடுபாட்டால் உள்ளம் மகிழும். புதிய பெண்களின் நட்பு பெருமை கொள்வீர்கள். வியாபாரிகள் அதிக இலாபம் அடைவர்.
தனுசு
sagittarius-thanusu
தாயார் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. இறை வழிபாடு செய்வதாலும், பெரியவர்கள் ஆசியாலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். ஸ்திரீ வகை இலாபமும், பயணத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விருந்தினர் வருகை மனமகிழ்ச்சி தரும். சொற்பொழிவுத் திறனால் மேடைப் பேச்சு மிளிரும். போட்டி, பந்தயங்களில் கிடைக்கும் வெற்றி பாராட்டுக்கள் சேர்க்கும்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு, கௌரவப் பட்டம், பதவி, சுப காரிய சித்தி, புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும் நாள். தொழில் வழி வருமானம் ஏற்படும். தங்கள் பணியை பொருத்து மேலதிகாரிகளின் ஆதரவு மேன்மையை அளிக்கும்.