கொங்கிறீட் கட்டம் ஒன்று கழுத்தில் விழுந்ததில் இரண்டு பிள்ளைகளி ன் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் மரணமான பரிதாப சம்பவம் ஒன் று அரனாயக ஹகுருகம்மான பகு தியில் நேற்று (05)இடம் பெற்றுள்ளது.
இவரை அரனாயக மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் அவர் உயிர் பிழைக்கவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள், பொலிஸார் தெரிவித்தனர்.
ஹகுருகம்மன பகுதியில் பழைய வீடு ஒன்றை புதுப்பிக்க கொத்தனா ர் ஒருவருக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை நடத்தி வரும் அரனாயக பொலிஸார் தெரிவித்தனர்.