கொங்கோவின் கிழக்கு பகுதியான கோமண்டாவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று, இஸ்லாமிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை அலைய்ட் டெமாக்ரடிக் ஃபோர்ஸ் (ADF) உறுப்பினர்கள் அதிகாலை 1 மணியளவில் நடத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.கோமண்டாவில் சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர் டியூடோன் டியூரந்தாபோ, 38 பேர் வரையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
உகாண்டா மற்றும் கொங்கோ எல்லைப் பகுதியில் செயல்படும் ADF, பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADFஇன் நோக்கம்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இடுரியில் நடந்த தாக்குதல்களில் ADF குழு 12இற்கும் அதிகமானோரை கொன்றது குறிப்பிடத்தக்கது.