சனிக்கிழமை, 5 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
காதல் உறவு கனிந்து களிப்புறும் நாள். மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். பிறரிடம் பணிவுடன் இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலங்கள் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை சேரும். தொழிலில் தனவரவு ஏற்படும். உனக்கு என்னையா ராஜா ! என உறவுகள் உரைக்கும் உன்னத நாள்.
மிதுனம்
gemini-mithunum
எங்கே நிம்மதி ? என இன்னல் இருந்தாலும், பின்னர் தினமும், சுகம் தந்து ஏற்றம் மிகும் இனிய நாள். புதிய தோழிகள் தோழமை கிடைத்தால் மகிழ்ச்சிதானே ? விரும்பியது எதுவாகினும் விரைந்து நடக்கும் .
கன்னி
virgo-kanni
பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் உதவி மனதை லேசாக்கும்.
மகரம்
capricorn-magaram
பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு. விருந்தோம்பலால் மனம் மகிழும். பிரிந்தவர் கூடுவர். பிரிந்தவர் கூடினால் பேரின்ப மன்றோ?
கடகம்
cancer-kadagam
மனக் கலக்கம், வீண் செலவுகள் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல்கள் ஏற்படும். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். இந்த நாள் இனிய நாளாக இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வழியேதும் இல்லை.
சிம்மம்
leo-simmam
எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும் புதுப்புது சிந்தனைகள் தோன்றும்.பொருட்கள் பத்திரப்படுத்தி வைத்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
துலாம்
libra-thulam
மனத் திருப்தி மற்றும் தனவரவு ஏற்படும். வாக்கு வன்மையால் வளம் பெருகும். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள். மனச்சோர்வும், உடல் சோர்வு ஏற்படலாம் .
மீனம்
pisces-meenam
ஆரோக்கியக் குறைவினால் நிம்மதியற்ற நிலை ஏற்படும். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே பிரச்சனைகள் எழலாம். விரும்பியபடி எதுவும் நடக்காது. தன் பணிவின்மையால் கஷ்டப்பட நேரும்.
தனுசு
sagittarius-thanusu
தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். மனைவியால் இலாபங்கள் ஏற்படும். பிறருக்கு உதவி புரிவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டின் கதவை வெற்றிகள் தட்டும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புத்தி தெளிவின்மையால் நிம்மதியற்ற நிலை தென்பட்டாலும், பின்னர் புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத பணவரவு உண்டு. காரியமெல்லாம் எல்லாம் நன்மையாக முடியும்.
கும்பம்
aquarius-kumbam
மனதில் அமைதியும், தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடு நிலவும். சுகம், சந்தோஷம் மற்றும் உல்லாசப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். அரசு ஆதரவும், பெரியோரால் நன்மைகளும் உண்டு.