மன்னார் நானாட்டானில் பட்டப் பகலில் கத்திமுனையில் தங்க நகைகள் கொள்ளை
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரது வீட்டினுள் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிழுந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிய வருகிறது
இந்த சம்பவமானது நேற்றைய தினம்(24) மாலை 4.30 மணியளவில் நானாட்டான் சந்தியருகில் இடம்பெற்றுள்ளது
குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த போது பின் பக்க வேலியால் வீட்டினுள் புகுந்து இந்த பகல் கொள்ளையைஇடம்பெற்றுள்ளது
குறித்த வீட்டின் அருகில் வங்கிகளும் கடைகளும் இருந்த போதும் சத்தம் போடக் கூடாது என்று கத்தி முனை மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கொள்ளையிட்டதுடன் குறித்த ஆசிரியை கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்ற முடியாமல் விட்டு விட்டு திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
குறித்த சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிசார் வருகை தந்து சம்பவ இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்
ஆசிரியையிடமிருந்து முகமூடித் திருடன் இரண்டரை பவுண் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
