உத்தரப் பிரதேசத்தின், ஷாஜகான்பூர் மாவட்டம், தில்ஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மகனை, அவரது தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன், போதைக்கு அடிமையான நிலையில், வீட்டிற்கு வந்து, சுத்தியலைக் காட்டி குடும்ப உறுப்பினர்களைக் கொன்று விடுவதாக மிரட்டி, தகராறில் ஈடுபட்ட நிலையில் அங்கு வந்த அவரது தந்தை, வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மகனை மிரட்டியுள்ளார்.
இருப்பினும் , மகனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஆத்திரமடைந்த தந்தை, துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் காயம் அடைந்த மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது