மற்றுமொரு புலமைப்பரிசில் திட்டம்-சற்று முன் மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு


இந்திய அரசின் அனுசரணையில் ஹோமியோபதி மருத்துவ பட்ட புலமைப்பரிசில் 2025/2026


இந்திய அரசின் அனுசரணையின் கீழ் இலங்கை மாணவ, மாணவிகள் 10 பேருக்கு மேற்கு வங்காள பல்கலைக்கழகத்தின் கீழ் கல்கட்டாவில் அமைந்துள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்தில் (National Institute of Homoeopathy NIH) 2025/2026 கல்வியாண்டிற்காக ஹோமியோபதி மருத்துவ பட்ட பாடநெறியை பயில்வதற்கு புலமைப்பரிசிலை வழங்குதல் சார்பாக தகைமையானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முகமாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சுதேச வைத்திய பிரிவினரால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


பாடநெறிக்காலம் 5 1/2 வருடங்களாகும். பாடநெறியை வெற்றிகரமாக பயின்ற பின்னர் ஹோமியோபதி மருத்துவ சபையின் பதிவைப் பெற்றுக்கொண்டு தகைமையுள்ள ஹோமியோபதி மருத்துவராக செயற்படுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.


தகைமைகள்:


க.பொ.த (உ/தரம்) பரீட்சைக்கு விஞ்ஞானப் பிரிவில் தோற்றி பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்கள் மூன்றிலும் ஒரே முறையில் சித்தி பெற்று அப் பரீட்சையில் பொது ஆங்கில பாடத்திலும் சித்திபெற்றிருத்தல் மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கில மொழிக்கு திறமைச் சித்தியுடன் சித்தியடைந்திருத்தல். 2025.08.15ம் திகதிக்குள்18-25 வயதிற்கு இடைப்பட்ட விண்ணப்பதாரிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை :


சகல விண்ணப்பதாரிகளும் பெயர், முகவரி, பிறந்த திகதி, வயது, நிரந்தர மற்றும் கையடக்க தொ.பே.இலக்கங்கள் 02 (விண்ணப்பதாரியை தொடர்பு கொள்ளக்கூடிய தொ.பே. இலக்கங்களை குறிப்பிடுதல் அத்தியாவசியம் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்) கல்வித் தகைமைகள் மற்றும் க.பொ.த (உ/தரம் மற்றும் சா/தரம்) பரீட்சையில் சித்தியடைந்த ஆண்டு போன்றவற்றை. தெளிவாகக் குறிப்பிட்டு தம்மால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் (சுயதரவுப் பத்திரம்) சகல சான்றிதழ்களின் உறுதி செய்யப்பட்ட பிரதிகளுடன் 2025.08.15 அல்லது அதற்கு முன்பு கீழ்க்காணும் முகவரிக்கு கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அல்லது நேரில் கொண்டுவந்து ஒப்படைக்கலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரதியொன்றை ministryofindigenousmedicine@gmail. com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்பப்படும் மூலப் பிரதிக்கு மேலதிகமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாத்திரம் பெக்ஸ் இல. 011 2112736 இற்கு அனுப்புதல் வேண்டும்.


மேலதிக செயலாளர் (நிர்வாகம்)


சுதேச வைத்தியப் பிரிவு,


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு,


3ம் மாடி,


இல. 26, ஸ்ரீ சங்கராஜ மாவத்த, கொழும்பு 10


தேர்ந்தெடுக்கப்படும் முறை :


நேர்முகத் தேர்வு குழுவினால் தகைமைகள் பரிசீலிக்கப்பட்ட பிள்பு திறமைப் பட்டியலின் பிரகாரம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


குறிப்பு :


இது பற்றி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரின் தீர்மானம் இறுதித் தீர்மானம் ஆவதுடன் கல்கட்டாவில் அமைந்துள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் மற்றும் குறித்த பாடநெறி பற்றிய மேலதிக விபரங்களை www.nih.nic.in இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் தரப்பினரில் ஆகக்கூடிய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரிகள் மாத்திரம் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.


அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஒருவழி (செல்வதற்கு)க்காக மாத்திரம் விமான பயணச்சீட்டு (Air ticket) அமைச்சினால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களை அழைத்து மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 011 -2112742


மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க


செயலாளர்,


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.