பொலிசாருக்கே தண்ணி காட்டும் செவ்வந்தி எங்கே-பராளுமன்றில் அனல் பறந்த விவாதம்..!

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தை கண்டுபிடித்த இந்த நாட்டில், கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் குற்றவாளி இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இப்போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதனையும் கூற முடியாத நிலைமையே உள்ளது. முதலில் மக்களின் பாதுகாப்பு அவசியமானது. அந்தப் பாதுகாப்பு இல்லாமலே உள்ளது.


நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இஷாரா செவ்வந்தி என்ற பெண் இன்னும் நாட்டுக்குள்ளேயே இருப்பதாக அண்மையில் ஊடக நிகழ்ச்சியொன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். அப்படியென்றால் அந்தப் பெண்ணை ஏன் கைது செய்ய முடியவில்லை.


இதுவொரு சிறிய நாடு, பொலிஸ்மா அதிபரையே பிடிக்க முடியுமென்றால், பிரபாகரன் இருந்த இடத்தையே கண்டுபிடிக்க முடியுமென்றால் ஏன் இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. முடிந்தால் ஒரு மாத காலத்திற்குள் அவரை பிடித்துக்காட்டுங்கள் என்று கோருகின்றோம்





அந்த சம்பவத்தில் 12 பேரை கைது செய்துள்ளதாக கூறினாலும் அதன் பிரதான சூத்திரதாரியை பிடிக்க முடியவில்லை. இப்போது பொதுமக்களின் பாதுகாப்பு டுபாயில் இருந்தே வழிநடத்தப்படுகிறது. அங்கிருந்து தொலைபேசி மூலம் கொலைகளை நடத்துகின்றனர்.

இறுதியில் அனைவருக்கும் டுபாயில் போய் இருக்கவே வேண்டிவரும். இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அத்துடன் அமெரிக்கா ஜனாதிபதியினால் அறிவிடப்பட்ட வரி அவ்வேறே இலங்கையில் செயற்படுத்தப்பட்டால் நிலைமை என்னவாகும். இங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்படும். இதனால் இதனை குறைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அண்மையில் இலங்கை வந்தார். அவர் வடக்கிற்கும் சென்றார். ஆனால் இங்கே யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்றன. இப்போது காசாவில் சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர்.


வைத்தியசாலைகள் இல்லை. உணவு இன்றி மக்கள் இருக்கின்றனர். அங்கே போகாது யுத்தம் முடிவடைந்த எமது சிறிய நாட்டுக்குள் வந்து எமது ஆடைகளுக்குள்ளேயே நுழைகிறார் என குறிப்பிட்டுள்ளார்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post