காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர் குப்பம் பகுதியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சௌந்தர்யா கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சௌந்தர்யாவின் காதலனான தினேஷ் (25) என்பவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், பின்னர் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சௌந்தர்யா, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தனது தோழிகளுடன் பணிபுரிந்து வந்தார். இதற்காக மேவளூர் குப்பத்தில் தோழிகளுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அதே பகுதியில் தங்கியிருந்த தினேஷ் என்ற இளைஞனை எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த சௌந்தர்யா, அவருடன் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் அடிக்கடி பைக்கில் சுற்றுவதையும், அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்று, செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.ஆனால், சௌந்தர்யாவின் தோழிகள், அவர் வேறு ஒரு இளைஞனுடன் மணிக்கணக்காக தொலைபேசியில் பேசுவதாக தினேஷிடம் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

சௌந்தர்யா, தினேஷின் தொலைபேசி எண்ணை பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், கடந்த 17ஆம் தேதி சௌந்தர்யாவின் அறைக்கு ரகசியமாகச் சென்றபோது, அங்கு சௌந்தர்யாவும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த விக்னேஷ் என்ற இளைஞனும் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது, சௌந்தர்யாவும் விக்னேஷும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அங்கிருந்து வெளியேறினார்.கடந்த சனிக்கிழமை (ஜூலை 19, 2025) மதியம், சௌந்தர்யா தனியாக அறையில் இருந்தபோது, தினேஷ் மீண்டும் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரத்தின் உச்சியில், “நீ அழகாக இருப்பதால்தான் இந்தப் பிரச்சனை” என்று கூறியபடி, தான் கொண்டு வந்த சுத்தியல் மற்றும் உளியால் சௌந்தர்யாவின் முகம், தலை, உடல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் விட்டு ரசித்து ரசித்து கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சௌந்தர்யாவை அருகிலிருந்து அமர்ந்து “சைக்கோத்தனமாக” பார்த்து ரசித்ததாகவும் தெரிகிறது. பின்னர், தினேஷ் தனது சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்குத் தப்பிச் சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், சௌந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிச்சயதார்த்தமான காதலி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த காதலன் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.