மொரவெவ பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டி விபத்து-இருவருக்கு காயம்!!
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மிரிஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (19) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்துள்ள நிலையில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான திருகோணமலை நாளாம் கட்டை பகுதியைச் சேர்ந்த எம்.நிஷாந்த (38வயது) மற்றும் திருகோணமலை கண்டி வீதி இலக்கம் 352 ல் வசித்து வரும் ஏ. வசந்தி (46வயது) ஆகிய இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் எனவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
