இலங்கையில் 05 ஆண்டுகளுக்குப் பிறகு அரச சேவைக்குப் புதிதாக 30,000 பேரைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை வலுப்படுத்த அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரச நிறுவனங்களில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் இலங்கையின் அரச சேவை பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்
பிரதேச செயலாளர்கள் உட்பட ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்களின் வசதிக்காக தேவையான வாகனங்களை வழங்குவதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் ஏற்படுவது அரசாங்கத்தின் அடிப்படைத் திட்டம் எனவும் டிஜிட்டல் அடையாள அட்டை அதில் ஒரு புதிய பாய்ச்சல் எனவும் அவர் மேலும் கூறினார்.