கடல் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழில் சமூகத்தினருக்கு, விவசாயம் மற்றும் கமநல காப்பீட்டு சபையினால் விசேட காப்பீட்டுத் திட்டமொன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதகமான வானிலைஅல்லது காலநிலை காரணமாகவோ அல்லது கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய திடீர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது இயலாமைக்காக இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாத காலகட்டத்தில் விபத்து ஏற்படும்போதும் இதன் கீழ் சலுகைகள் வழங்கப்படும்.
வருடாந்தம் 2000 ரூபாய் என்ற கட்டணத்தின் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், திடீர் மரணம் ஏற்படுமாயின் ரூ. 1.2 மில்லியன் இழப்பீடு வழங்கப்படுகிறது.
அத்துடன், முழுமையான அல்லது பகுதியளவு இயலாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் இழப்பீடு வழங்கப்படும்.
விபத்தின் விளைவாக கடுமையான காயங்கள் ஏற்பட்டால் விரைவான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
قد تُعجبك هذه المشاركات
إرسال تعليق
إرسال تعليق
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.