திருப்பூர் மாவட்டம், கைகாட்டி புதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கணவர் கவின் குமார் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் வரதட்சணை கேட்டு மிரட்டப்பட்டதாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரிதன்யாவின் தாயார், “என் மகள் பாத்ரூம் செல்லும்போது கூட கவின் பின்னால் நின்று பார்ப்பாராம். ‘எனக்கு கூச்சமாக இருக்கிறது, இப்படி செய்யாதீர்கள், நாம் காதலித்து திருமணம் செய்யவில்லை, வீட்டில் பார்த்து முடிவு செய்த திருமணம்’ என்று கெஞ்சியும், அவர் பின்தொடர்ந்து அத்துமீறியதாக” கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், இந்து திராவிட மக்கள் கட்சியின் வேட்பாளருமாவார். திருமணத்திற்கு 300 சவரன் தங்கமும், ரூ.70 லட்சம் மதிப்புள்ள வால்வோ காரும் வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கவின் மற்றும் அவரது பெற்றோர் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் மனமுடைந்த ரிதன்யா, கோவிலுக்கு செல்வதாகக் கூறி, வழியில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து கவின் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.