தமிழ், சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணை 07.08.2025 இல் நிறைவு.
இரண்டாம் தவணையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 25.07.2025 ஆந் திகதியுடன் நிறைவடைய உள்ளது.இதற்கமைய இன்னும் 17 நாட்களே கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள முடியும்.ஆகவே மதிப்புக்குரிய ஆசிரியர்கள் இந்த தவணைக்குரிய பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய, லீவு பெறுவதைக் குறைத்து கற்பித்தலில் ஈடுபட வேண்டும்.
இரண்டாம் தவணை க்கான வலயமட்ட பரீட்சை அனைத்தும் எதிர்வரும் 28.07.2025- 07.08.2025 ஆம் திகதிக்குள் நடாத்தி முடிக்க வேண்டும்.
இரண்டாம் தவணை விடுமுறைக் காலத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து (08.08.2025- 16.08.2025) , மூன்றாவது தவணையின் முதல் நாள் (17.08.2025) மாணவர் தேர்ச்சி அறிக்கையை வழங்குவதோடு, முதல் வாரத்தில் புள்ளிப் பதிவேட்டில் புள்ளிகளை பதிவு செய்ய வேண்டும்.
வடக்குமாகாணம் இரண்டாம் தவணைபரீட்சை ஆரம்பமாகும் திகதிகள்-2025
தரம் 3 -5 வரையான வகுப்புக்கள் இரண்டாம் தவணை 30.07.2025 01.08.2025
தரம் 6 -11 வரையான வகுப்புக்கள் இரண்டாம் தவணை 24.07.2025 05.08.2025
தரம் -12 மூன்றாம் தவணை 24.07.2025 06.08.2025
தரம் -13 ஐந்தாம் தவணை 22.07.2025 07.08.2025
தரம் -13 ஆறாம் தவணை (இறுதிப்பரீட்சை) 07.10.2025 24.10.2025