அநுராதபுரம் - திறப்பனை நகரத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் இருவர் வீட்டு உரிமையாளரை பொல்லால் தாக்கி காயப்படுத்திவிட்டு பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த வீட்டின் உரிமையாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 தங்க மாலைகள், மோதிரம், தங்க வளையல், பெண்டன் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் திறப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் திறப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.