அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே (Upali Pannilage) தெரிவித்துள்ளார்
