அஸ்வெசும தொடர்பில் சற்று முன் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..?

 

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். 


மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் உபாலி பன்னிலகே நேற்று இதனை தெரிவித்தார்.

'பிரஜா சக்தி' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்க விழா இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார். 


அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்புரித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அதனூடாக சமூகத்தை வலுவூட்டுதல் இதன் நோக்கமாகும்.


மத்திய அரசாங்கத்தின் முக்கியமான ஒன்பது அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் இந்த செயற்திட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post