வடக்கு மாகாணத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் போட்டிப் பரீட்சை முறையில் மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் இன்று (05.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.