கிளிநொச்சியை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக நேற்று (03) காலை உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம் அணைக்கட்டு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற உள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் அவர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி மற்றும் வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும், நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும், பல்வேறு நெருக்கடிகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் என்பவற்றுக்கு மத்தியில் செய்தியாளராக பணியாற்றியவர் குறிப்பாக பல்வேறுபட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய ஒரு நல்ல செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார்.
2010ம் ஆண்டு முதல் தினக்குரல், வலம்புரி, தினகரன், தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களில் கிளிநொச்சி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் 52வது வயதில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.