கல்வி மறுசீரமைப்பும் ஆரம்பக் கல்வியும்
இந்த கல்வி மறுசீரமைப்பு "கல்வி வெள்ளை அறிக்கை" என அழைக்கப்படும்.
1997 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் பின்னரான பாரிய மாற்றமாக எதிர்பார்க்கப்படுகிறது.
3 முதன்மை நிலைகளுக்கும் 9 பொதுவான கற்றல் பரப்புகள் (9 Common Learning Areas) அறிமுகம்.
சுற்றாடல் சார் செயற்பாடுகளுடன் சேர்த்து ஆரம்ப விஞ்ஞானம் என்ற பாடமும் அறிமுகம்.(1997 இற்கு முதல் ஆரம்ப விஞ்ஞானம் என்ற பாடம் இருந்தது.)
சுற்றாடல் சார் செயற்பாடுகள் என்ற பாடம் அறிமுகமாவதற்கு முன்னர் சித்திரம், கைப்பணி ஆக்கம், அழகியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
எனினும் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் உரிய முறையில் செயற்படுத்துவதில் குறைபாடுகள் காணப்பட்டன.
சுற்றாடல் சார் செயற்பாடுகள் பாடத்துக்காக பாடநூல் இல்லாமையால் அதனை பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடுடையதாகக் கற்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் ERA இற்கு தனியார் நூல்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இந்த மறுசீரமைப்பில் தரம் 1 ES&ERA இற்கு செயல்நூல் ஒன்று வழங்கப்படுகிறது.
ஒன்றிணைந்த அழகியல் கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும், இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்ற பாடங்கள் ERA உடன் இணைத்துக் கற்பித்தாலும் புதிய கல்வி மறுசீரமைப்பில் இவை தனித் துறைகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை பாடங்களாக அல்லாமல் Module முறையில் Activities ஆக Credit அடிப்படையில் அமைந்தால் சிறப்பு.
சமயப்பாடம் புதிய கல்வி மறுசீரமைப்பில் சமையமும் விழுமியக் கல்வியும் என மாற்றம் பெற்றுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஆரம்பக்கல்விக்காக அறிமுகம் செய்யும் பாடங்கள்
1. Mother tonge
2. English Language
3. Second National Language
4. Mathematics
5. Religion and Value Education
6. Elementary Science and ERA
7. Integrated Aesthetic Activities
8. Health & Physical Education
9. Co curricular Activities
இது தொடர்பாக மாகாண வளவாளர்களைப் பயிற்றுவிக்கும் பணி இம்மாதம் இறுதியில் ஆரம்பமாகவிருக்கிறது.
S. Amjeth Khan
DDE/Primary