உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரேங்கேறியுள்ளது. ICU-வில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை கவனிக்காமல் அங்கு பணியில் இருந்த டாக்டர் 'ஹாயாக’ தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அவரை உறவினர்கள் எழுப்ப முயற்சித்தும் மெய் மறந்து தூங்கியுள்ளார். இதனால், அந்த நோயாளி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இணையத்தளத்தில் இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.