காணமால் போன O/L மாணவன் சற்று முன் சடலமாக மீட்பு-வெளியான அதிர்ச்சி காரணம்..!

 

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் இன்று (09)  மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த குறித்த மாணவன் சக பாடசாலை மாணவர்களுடன், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.

 

பின்னர் குறித்த மாணவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி இரத்தத்தை கழுவி கொண்டிருந்த வேலையிலேயே அம் மாணவன்  நீர்தேக்கதில் விழுந்துள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மாணவனின் பெற்றோர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், மீட்கப்பட்ட மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சிறப்பு தடயவியல் நிபுணரிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post