செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே முதுகரை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், கோடை விடுமுறையின்போது தனது பெற்றோரால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவி, ஆசிரியரிடம் அழுது கொண்டே இதனை தெரிவித்தார்.மாணவியின் தகவலின் அடிப்படையில், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் சைல்ட்லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மாணவியின் தாய், மூன்றாவது கணவர் முருகனுடன் வாழ்ந்து வந்ததாகவும், இவர் மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட 13-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் அனுப்பி பணம் சம்பாதித்ததாகவும் தெரியவந்தது.
மேலும், மதுராந்தகத்தில் உள்ள லாட்ஜில் மாணவியை அனுப்பியதும் அம்பலமானது.இதனால் உடல் மற்றும் மனவலியால் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி விடுதியில் தங்கியிருந்தபோதும், விடுமுறை நாட்களில் பெற்றோரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தாய், மூன்றாவது கணவர் முருகன், மற்றொரு முருகன் மற்றும் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மீதமுள்ளவர்களை காவல்துறை தேடி வருகிறது.மாணவிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.
மாணவியின் தைரியத்தை போலீசார் பாராட்டினர். பெற்ற தாயே மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.