அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின், ஒகஸ்ட் மாதத்துக்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை நேற்று(14.08.2025) அறிவித்துள்ளது.
அதன்படி அஸ்வெசும கொடுப்பனவு இன்று (15.08.2025) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.
மேலும், 1,421,745 பயனாளிகளுக்கு ரூ. 11,275,973,750.00 அஸ்வெசும கொடுப்பன தொகை விநியோகிக்கப்பட உள்ளது.
ஒகஸ்ட் 15 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணத்தைப் பெற முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.